தமிழக தொழிலாளர் கல்வி நிலையத்தில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., – எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, பி.ஜி.டி.எல்.ஏ., மாலை நேர பட்டயப்படிப்பு; தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும், வார இறுதி பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.பி.ஏ., – எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள், சென்னை பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மற்ற படிப்புகள், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடந்து வருகின்றன.பிளஸ் 2 படித்த மாணவர்கள் பட்டப் படிப்பிற்கும், பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.மதிப்பெண் அடிப்படையில், அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை பெற, tilschennai@tn.gov.in என்ற, ‘இ – மெயில்’ முகவரிக்கு, தங்கள் பெயர், மொபைல் போன் எண், முகவரி மற்றும் இ – மெயில் விபரங்களை அனுப்பவும்.
விண்ணப்ப கட்டணம்200 ரூபாய். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு 100 ரூபாய். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக., 24க்குள் வந்தடைய வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 98841 59410, 044 – 2956 7885, 2956 7886 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.