திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில் இயற்கை தேனீ பண்ணையில் வரும் ஜூலை 30ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.
- மதிய உணவு வழங்கப்படும்.
- பங்குபெறுவோருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
- முன்பதிவு அவசியம்.
- ஆண், பெண் என இருபாலருக்கும் அனுமதியளிக்கப்படும்.
- இந்த ஒரு நாள் இலவசப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வு செய்யும் முறை முதலானவை இப்பயிற்சியில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முடித்த மாணவர்களுக்கு இந்த தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த தொழிலாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது.
- முன்பதிவு செய்து கொண்டவர்கள்மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பயிற்சியின்போது உணவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி: தேனீ வளர்ப்பு பயிற்சி
நாள்: ஜூலை 30, 2023
கட்டணம்: இலவசம்
இடம்: இயற்கை தேனீ பண்ணை
இது குறித்த மேலும் தகவல்களுக்கு 8825983712 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்த எண்ணிலேயே முன்பதிவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள விவசாயிகள்,
தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


