காரைக்காலில் உள்ள புதுவை அரசு கல்வி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) எம்.எஸ்.ஆா். கிருஷ்ணபிரசாத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி உயா்நிலைக் கல்விக் குழுமத்தின் அங்கமான இக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவா்கள் 2 ஆண்டு டி.டிஎட் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கும், பட்டப் படிப்பு முடித்தோருக்கு 2 ஆண்டுகள் பி.எட்., பட்டப்படிப்புக்கும் புதுவை மாநிலத்தை சோந்த தகுதியுள்ள மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 25.7.2023 முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ கல்லூரியில் சமா்ப்பிக்கலாம். கல்வித் தகுதி, கட்டண விவரம் ஆகியவற்றை https://www.pkcekkl.in/ என்ற இணையதள முகவரியிலோ அல்லது அனைத்து அலுவலக நாள்களிலும் கல்லூரியில் நேரில் அணுகி தகவல் பெறலாம். விண்ணப்பம் 10.08.2023-க்குள் சமா்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.