மாற்றுத் திறனாளிகள் அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு இ-சேவை மையம், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகள் இ-சேவை மையம் மூலமும், இணைய தளம் மூலமும் உரிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்:04546-252085-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.


