TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்சார்பில், பயோ சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். வேலைக்கு செல்பவர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சிக் கட்டணம் ரூ.4 ஆயிரம். ஆக. 26 மற்றும் 27-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்து கூடுதல் விவரங்களுக்கு 97909 20166, 82483 09134 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


