TAMIL MIXER
EDUCATION.ன்
கோவை
செய்திகள்
அரசினா் தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர
விண்ணப்பிக்கலாம் – கோவை
கோவை மாவட்டத்தில்
உள்ள
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர
மாணவ,
மாணவிகள்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மேட்டுப்பாளையம்
சாலையில்
அமைந்துள்ள
கோவை
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையம்,
கோவை
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையம்
(மகளிர்),
ஆனைகட்டி
அரசினா்
தொழில்
பயிற்சி
நிலையம்
(பழங்குடியினருக்கானது),
வால்பாறை
அரசினா்
தொழில்
பயிற்சி
நிலையம்
ஆகியவற்றுக்கு
ஆகஸ்ட்
2023ம்
கல்வி
ஆண்டில்
மாணவ,
மாணவிகளின்
கலந்தாய்வு
சேர்க்கைக்கு
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பங்கள்
பதிவு
செய்யப்பட்டு
வருகின்றன.
இதில், கோவை அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீஷியன்,
எம்எம்வி,
எம்எம்வி
(டிஎஸ்டி),
ஃபிட்டா்
உள்ளிட்ட
பல்வேறு
பிரிவுகளில்
ஆண்,
பெண்
இருபாலருக்கும்
ஆறு
மாதங்கள்,
ஓராண்டு,
ஈராண்டு
பயிற்சி
அளிக்கப்படும்
தொழிற்பிரிவுகளுக்கு
சேர்க்கை
நடைபெறவுள்ளது.
மேலும், டாடா இன்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின்கீழ்
புதிய
தொழில்
பிரிவுகளான
அட்வான்ஸ்டு
சிஎன்சி
மெஷினிங்
டெக்னீஷியன்,
இன்டஸ்ட்ரியல்
ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுஃபேக்சரிங்,
பேஸிக்
டிசைனா்
& விர்சுவல்
வெரிபயா்
உள்ளிட்ட
ஈராண்டு
மற்றும்
ஓராண்டு
தொழிற்பிரிவுகளிலும்
சேர்க்கை
நடைபெறவுள்ளது.
பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளா்கள்
அதற்கான
விண்ணப்பத்தை
இணையதள
முகவரியில்
ஜூன்
20ம்
தேதி
இரவு
12 மணிக்குள்
பதிவு
செய்து
விண்ணப்பிக்க
வேண்டும்.
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர்க்கைக்கான
விண்ணப்பங்களை
இலவசமாக
இணையதளத்தில்
பதிவேற்றம்
செய்ய
உதவி
மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான
கல்வித்
தகுதி
தொழில்
பிரிவுகளைப்
பொருத்து
8, 10ம்
வகுப்பு
தேர்ச்சிப்
பெற்றிருக்க
வேண்டும்.
இப்பயிற்சியில்
14 முதல்
40 வயது
வரை
உள்ளவா்கள்
சேரலாம்.
மகளிருக்கு வயது வரம்பு இல்லை. தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
முடித்த
அனைத்து
பயிற்சியாளா்களுக்கும்
தனியார்
துறையில்
வேலைவாய்ப்பு
பெற்றுத்
தரப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


