தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் 3 ஆண்டு எல்.எல்.பி.
சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சீர்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு எல்.எல்.பி.(ஹானர்ஸ்) படிப்புக்கும், இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கும் வருகிற 17ம் தேதி (நாளை மறுதினம்) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஓம்மன் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


