TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழ்நாட்டில் அனைத்து
வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், 2வது மற்றும்
4வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது
மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர்,
வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்
துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று
வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இரண்டாவது
மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
தனியார் துறையில் பணி
நியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து
12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த
வேலைவாய்ப்பு முகாம்,
ஆலந்தூர் சாலையில் உள்ள
ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
காலை 10.00 மணி முதல்
மதியம் 2.00 மணி வரை
நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம்
வகுப்பு, 12ம் வகுப்பு,
ஐ.டி.ஐ,
டிப்ளமோ, கலை, அறிவியல்
மற்றும் தொழில் நுட்ப
பிரிவில் எதாவது ஒரு
பட்டம் (டிகிரி) ஆகிய
கல்வித்தகுதியை உடைய
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட
தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு
செய்ய உள்ளனர்.
இம்முகாம்
வாயிலாக பணி நியமனம்
பெறும் இளைஞர்களின் பதிவு
இரத்து செய்யப்படமாட்டாது. வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து
கொள்ள எந்தவித கட்டணமும்
செலுத்த தேவை இல்லை.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


