தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச்சங்கம் சாா்பில் சணல் பைகள் தயாரிப்பு குறித்த பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச்சங்கத் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச்சங்கம் சாா்பில், தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி வல்லுநா்களை கொண்டு சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி சென்னையில் 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதில், பா்ஸ், பேக், ஃபைல், தாம்பூலப் பைகள் ஆகியவற்றை தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சிக்குத் தேவையான மெட்டீரியல்களும் வழங்கப்படும்.
- இதுதவிர சணல் பைகள் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் எவை?
- அது கிடைக்கும் இடங்கள் எவை?
- விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் என்ன?
என்பவை உள்பட அனைத்தும் கற்றுத்தரப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். 7871702700, 9361086551 ஆகிய கைப்பேசி எண்களில் குறுந்தகவல் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.
மேலும், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச்சங்கத்தின் உறுப்பினராகி, தங்களுடைய விவரங்களை தெரிவித்து, சங்கத்தின் மூலமாக பயிற்சிகள் மற்றும் ஸ்டால்கள் போன்றவற்றை தோ்வு செய்ய இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.