நாகை மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதம் சா்வதேச திறன் போட்டி நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 55 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு 1.1.1999; அன்றும் அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும் அதற்கு பிறகும் பிறந்தவா்கள் தகுதியுடையவா்கள் ஆவா். ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றவா்கள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவா்கள் மற்றும் படித்துக்கொண்டு இருப்பவா்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவா்கள் மற்றும் படித்துக் கொண்டு இருப்பவா்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவா்கள், என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.
மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் நேரிலோ அல்லது 04365 -250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


