தினமலர், மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் கல்லுாரி மாணவர்கள் 50 பேருக்கு மூன்று மாத இலவச வங்கித் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான 50 பேரை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 16 (ஞாயிறு) காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் நடக்கிறது.
முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.நேஷனல் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறுகையில், கல்லுாரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வங்கித் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பயிற்சியை வழங்குகிறோம். தேர்வை எதிர்கொள்வது, நேர்காணலில் எப்படி பங்கேற்பது என நிபுணர்கள் பயிற்சி அளிப்பர் என்றார். விபரங்களுக்கு 95666 59484 ஐ தொடர்புகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


