சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து இடுபொருள்களை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், 2021-22-ஆம் ஆண்டு முதல் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் தோந்தெடுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை – உழவா் நலத் துறையில் பல்வேறு நல உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இத்திட்டங்களில் பயன் பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவா்களது தேவையை முன்கூட்டியே வேளாண் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் உழவன் செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப் பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனா். அனைத்து விவசாயிகளும் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப் பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் முன்பதிவு செய்வதால் துறையில் வழங்கப்படும் இடுபொருள்கள், திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


