TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்
தொகை
செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் மாதம் தோறும் உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்
மாற்றுத்திறனாளிகள்,
தங்களது
ஆதார்
எண்ணுடன்
கூடிய
சுயவிவரங்களை
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலரிடம்
சமர்ப்பிக்க
வேண்டும்
என
அரசு
தெரிவித்துள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
மாற்றுத்திறனாளிகளுக்கு
பராமரிப்பு
உதவித்
தொகையாக
மாதந்தோறும்
2,000 ரூபாய்
வழங்கப்பட்டு
வருகிறது.
குறிப்பாக
75 சதவிகிதத்திற்கு
மேல்
கடும்
உடல்
பாதிக்கப்பட்டவர்கள்,
மனவளர்ச்சி
குன்றியோர்,
முதுகு
தண்டுவடம்,
பார்கின்சன்
நோய்,
தண்டுவட
மரப்பு,
நாட்பட்ட
நரம்பியல்
பாதிப்பு,
தசைச்சிதைவு
ஆகிய
நோய்கள்
மற்றும்
தொழுநோயால்
பாதிப்படைந்தோர்
என
2,11,391 பேர்
இத்திட்டத்தின்
கீழ்
பயன்பெற்று
வருகின்றனர்.
இத்திட்டத்தின்
கீழ்
புதிதாக
விண்ணப்பித்து
காத்திருப்போர்
24,951 நபர்களுக்கும்
தற்போது
உதவித்தொகை
வழங்க
அரசு
நிதி
ஒதுக்கீடு
செய்து
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்
பயனை
தகுதியுள்ள
பயனாளிகள்
பெறும்
வகையில்,
மாற்றுத்திறனாளிகள்
நலத்
துறையின்
கீழ்
பயன்பெறும்
அனைத்து
பயனாளிகளும்
தங்களுடைய
பெயருடன்
ஆதார்
எண்,
முகவரி,
குறைபாட்டின்
தன்மை
மற்றும்
சதவிகிதம்,
தேசிய
அடையாள
அட்டை
எண்,
தங்களின்
வங்கி
கணக்கு
எண்,
தொலைபேசி
எண்
ஆகியவற்றை
அந்தந்த
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலர்களின்
அலுவலகத்தில்
வழங்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


