திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் கீழ்வருவன பயிற்றுவிக்கப்பட உள்ளன.
தேனீக்களின் வகைகள் மற்றும் தேனீ வளர்ப்புக்குரிய உபகரணங்கள்
, தேனீ கூட்டங்களை கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வு செய்யும் முறை, தேனீ பராமரிப்பு திறன், தேனீக்களின் இயற்கை எதிரிகளை நிர்வகிக்கும் முறைகள், தேனீக்களின் உணவு பயிர்கள், தேன் சுத்தம் செய்தல் மற்றும் தேன் சேமிப்பு முறைகள், தேனீ விற்பனை குறித்த சந்தை தகவல் ஆகியவை இப்பயிற்சியில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தேனீ வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ₹ 590 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்த ரசீதினைப் பயிற்சி நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணிக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பயிற்சியின்போது தேநீர் மற்றும் உணவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி: தேனீ வளர்ப்பு பயிற்சி
நாள்: ஜூலை 20, 2023
கட்டணம்: ரூ.590
இடம்: வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி
இது குறித்த மேலும் தகவல்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணியிலோ அல்லது 0431296285 என்ற தொலைபேசி எண் களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


