மத்திய அரசின் கல்வி உதவித்தொகைப் பெற ஆக.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியின பிரிவுகளைச் சோந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவாா்கள்.
இத்தேர்வுக்கு ஆக.10-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆக.12 முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப்.29-ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளங்களில் https://yet.nta.ac.in/ தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


