HomeBlogSBI வாடிக்கையாளர்கள் இனி இந்த 9 சேவைகளை Whatsapp மூலம் பெறலாம்!
- Advertisment -

SBI வாடிக்கையாளர்கள் இனி இந்த 9 சேவைகளை Whatsapp மூலம் பெறலாம்!

SBI வாடிக்கையாளர்கள் இனி இந்த 9 சேவைகளை Whatsapp மூலம் பெறலாம்!

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. 1000 எடுக்க கூட வங்கிகளுக்கு சென்ற நிலை மாறி 10 ரூபாய் என்றாலும் அதை போனில் இருந்து நொடிப்பொழுதில் காட்டும் நிலை வந்துவிட்டது. UPI பயன்படுத்தி பணம் பெறுவது, செலுத்துவது, வங்கி இருப்புத்தொகை தெரிந்துகொள்வது சாத்தியமாகியுள்ளது. மேலும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களுக்கு வங்கிகள் தனியாக இணையதளம், செயலி முதலியவற்றை வைத்துள்ளது.

குறுஞ்செய்தி மூலம் வங்கிக்கணக்கு தொகைகளை தெரிந்துகொள்ளவும் வசதிகள் உள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் மூலம் வங்கி பரிவர்த்தனை செய்யும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாட்ஸப் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு தற்போது மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது.

எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவையை பெறுவது எப்படி?

எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையை பயன்படுத்த வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து WAREG என்று பதிவிட்டு அதோடு உங்கள் எஸ். பி.ஐ, வங்கி கணக்கு எண்ணையும் உள்ளிட்டு 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். பதிவு முடிந்ததும், நீங்கள் SBI இன் WhatsApp சேவையைப் பயன்படுத்த முடியும்.

அப்படி இல்லையெனில் வாட்ஸ்அப்பில் 9022690226 என்ற எண்ணுக்கு ஹாய் என அனுப்பினால். அதன் பிறகு செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் Chatbot செயல்பட தொடங்கும். அதன் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்தால் வங்கி சேவைகளை வாட்ஸப் மூலமே பெறலாம்.

9 இலவச சேவைகள் :

  • இனி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வாட்ஸப் மூலம் கீழ்கண்ட வசதிகளை இலவசமாக பெற முடியும்.
  • கணக்கு இருப்பு நிலவரம் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளுக்கான மினி அறிக்கையை வாட்சப்பில் பெறலாம்.
  • ஓய்வூதிய தகவல்கள், வைப்பு நிதி பற்றிய தகவல், சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு, கால வைப்பு ஆகியவற்றின் தகவல்கள் மற்றும் வட்டி விகிதங்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
  • வீட்டுக் கடன், கார் கடன், தங்கக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் ஆகியவற்றின் முழு தகவல்கள் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்தும் செய்திகள் கிடைக்கும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் NRE கணக்கு, NRO கணக்கு மற்றும் அதற்கான வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களும் இனி நொடிப்பொழுதில் கிடைக்கும்.
  • உடனடியாக புதிய வங்கி அக்கவுண்ட் ஓப்பன் செய்வதற்கான அம்சங்கள் / தகுதி, தேவைகள் மற்றும் இது தொடர்பான கேள்விகளுக்கான பதில்களும் வாட்சப் செய்திகளாக கிடைக்கும்.
  • வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொடர்பு எண்கள் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான உதவி எண்களை இதன் மூலம் பெறலாம்.
  • அங்கீகரிக்கப்பட்ட கடன் தகவல்கள்: தனிநபர் கடன், கார் கடன், இரு சக்கர வாகனக் கடன் குறித்த தகவல்களும் அனுப்பப்படும்.
  • அக்கவுண்ட் பேலன்ஸ், வாட்ஸ்அப் பேங்கிங் பதிவுகள் ஆகிய வசதிகள் இங்கு கிடைக்கும்.
  • அது மட்டும் இன்றி பரிவர்த்தனை குறித்த சுருக்கமான தகவல்களும் வாட்சப் மூலம்பெறலாம்.
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -