HomeBlogசென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

சென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
Chennai Book Fair
செய்திகள்

சென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

புத்தக வாசிப்பாளர்கள்
ஆவலுடன்
எதிர்பார்த்து
காத்திருந்த
46
வது
புத்தக
கண்காட்சியை
இன்று
முதலமைச்சர்
தொடங்கி
வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்
மற்றும்
பதிப்பாளர்
சங்கத்தின்
(
பபாசி)
சார்பில்
ஒவ்வொரு
ஆண்டும்
சென்னை
நந்தனம்
ஒய்.எம்.சி.. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது.

ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்நிகழ்வில்
அமைச்சர்
அன்பில்
மகேஷ்
பொய்யாமொழியும்
பங்கேற்கவுள்ளார்.

இந்நிகழ்வில்
தேவி
பாரதி
(
நாவல்),
சந்திரா
தங்கராஜ்
(
சிறுகதை),
தேவதேவன்
(
கவிதை),
சி.மோகன் (மொழிபெயர்ப்பு),
பிரளயன்
(
நாடகம்),
பா.ரா.சுப்பிரமணியன்
(
உரைநடை)
ஆகிய
6
பேருக்கு
முத்தமிழறிஞர்
கலைஞர்
பொற்கிழி
விருதுகளையும்
தலா
ரூ.1
லட்சம்
பணத்தையும்
முதலமைச்சர்
வழங்குகிறார்.
மேலும்
9
பேருக்கு
பபாசி
சார்பில்
விருதுகளும்
வழங்கப்பட
உள்ளது.
புத்தக
கண்காட்சி
தினமும்
காலை
11
மணியில்
இருந்து
இரவு
8.30
மணிக்கு
நடைபெற
உள்ளது.

சிறப்புகள்
என்ன?

சென்னை புத்தக கண்காட்சிக்காக
கடந்தாண்டு
800
அரங்குகள்
அமைக்கப்பட்ட
நிலையில்,
நடப்பாண்டு
கூடுதலாக
200
அரங்குகள்
அமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம்
முதன்முறையாக
திருநங்கையர்
நடத்தும்
பதிப்பகத்திற்கு
அரங்கம்
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்
கலந்து
கொள்ள
இருக்கும்
தமிழக
அரசு
சார்பில்
நடைபெறும்
சர்வதேச
புத்தக
கண்காட்சி
ஜனவரி
16,17,18
ஆகிய
3
நாட்கள்
நடக்கவுள்ளது.
புத்தக
கண்காட்சிக்காக
கடந்த
2
ஆண்டுகளாக
பங்கேற்க
முடியாமல்
இருந்த
புலம்பெயர்
எழுத்தாளர்கள்,தமிழர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக
தென்னிந்திய
புத்தக
விற்பனையாளர்
மற்றும்
பதிப்பாளர்
சங்கத்தின்
(
பபாசி)
தலைவர்
வைரவன்
மற்றும்
செயலாளர்
முருகன்
தெரிவித்துள்ளனர்.

சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதன் காரணமாக இந்தாண்டு தொல்லியல் அரங்குகள் அமைக்கப்படவில்லை.
அதேபோல்
20
முதல்
40
புத்தகங்கள்
வைத்திருப்பவர்களுக்கு
மினி
ராக்
சிஸ்டம்
முறை
அறிமுகமாகியுள்ளது
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் வாங்குபவர்கள்
டிஜிட்டல்
முறையில்
பணம்
செலுத்த
வசதியாக
நெட்வொர்க்
பிரச்சினை
ஏற்படாமல்
ஜியோ,
ஏர்டெல்
நெட்வொர்க்
டவர்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல்
பிஎஸ்என்எல்
சார்பில்
வைஃபை
சேவையும்
செயல்படுத்தப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு
நுழைவு
கட்டணமாக
ரூ.10ம் வசூலிக்கப்படும்
நிலையில்,
பள்ளிகள்
மூலம்
வரும்
மாணவர்களுக்கு
அனுமதி
இலவசம்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு
புத்தக
காட்சியை
30
லட்சம்
பேர்
பார்வையிட்ட
நிலையில்
இந்தாண்டு
கூடுதலாக
20
லட்சம்
பேர்
வருவார்கள்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புத்தக வாசிப்பாளர்களை
சந்திக்க
எழுத்தாளர்களும்
வருகை
தருவார்கள்.
கண்காட்சியின்
ஒவ்வொரு
நாள்
மாலையிலும்
கருத்தரங்கம்,
பட்டிமன்றம்
நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular