தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு பிப்.6 ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு பிப்.6 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் சாா்பில், பல்நோக்குப் பணியாளா், ஹவில்தாா் ஆகிய பணிநிலைகளில் 11,409 காலியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்வுக்கு இணைய வழியில் பிப்.17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த போட்டித் தேர்வுக்குத் தயாராக விரும்புவோா் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு பிப்.6 ஆம் தேதி தொடங்குகிறது. இப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் அலுவலக வேலை நாள்களில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு 9942503151 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


