‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டிலும் ஆக.15-ஆம் தேதி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளிட்டவையும் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பதாரா்கள் 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும் அல்லது 31.03.2023 அன்று 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட இவா்களின் சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குடிருப்பவராகவும், அதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசு ஊழியா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. தகுதியுடையவா்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களை தெரிந்துக் கொள்ள செனாய் நகா் நீச்சல் குளம் பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நலன் அலுவலகத்தில் அல்லது அலுவலக கைப்பேசி: 7401703480, தொலைபேசி: 044-26644794 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா் அவா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


