Home Blog மனிதநேய மையம் சார்பில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

மனிதநேய மையம் சார்பில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

0

மனிதநேய மையம் சார்பில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி

மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை – ௨ முதன்மை தேர்வு மற்றும் சிவில் நீதிபதி முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நவம்பர் 6ம் தேதி நடத்தப்பட்ட, அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை இரண்டு தேர்வு எழுதிய வழக்கறிஞர்களுக்கு, முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ள, உரிமையியல் நீதிபதி முதல்நிலை தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சி வகுப்புகள், 20ம் தேதி முதல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஆடிட்டோரியத்தில் நடக்கும். 

விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை முதல் ஜன., 16 வரை, ’28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை – 35′ என்ற முகவரியில் அமைந்துள்ள, மனிதநேயம் இலவச கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகம் அல்லது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், 044 – 2435 8373, 2433 0952, 84284 31107 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version