தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் தொகுதி-1 மற்றும் தொகுதி-2 காலி பணியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஜூலை 14 முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.
இதில், போட்டித் தேர்வுகளை எதிா்கொள்ளும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞா்களுக்கு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94990 55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.