டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) தொடங்க உள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட நிரலின்படி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தொடா்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரக குறிப்பாணையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலங்களில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்களில் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது.
இந்த இரு தேர்வுகளுக்கும் சோத்து ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பாக நடத்துமாறு ஆணையரக குறிப்பாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) முதல் தொடங்கப்பட உள்ளது.
எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.