உணவின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிதாக செயலி
திருப்பூா் மாவட்டத்தில்
உணவின்
தரம்
குறித்த
புகார்களை
பதிவு
செய்ய
புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
குறைதீா்
செயலி
மற்றும்
இணையதளத்தைப்
பயன்படுத்த
வேண்டும்
என்று
மாவட்ட
நிர்வாகம்
அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொது மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை
உறுதி
செய்யும்
வகையில்
தமிழ்நாடு
உணவுப்
பாதுகாப்புத்
துறை
பல்வேறு
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகிறது.
இதன் முக்கிய அம்சமாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை
மக்கள்
எளிதில்
தெரிந்து
கொள்ளும்
வகையில், https://www.foodsafety.tn.gov.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவின் தரம் குறித்து, நுகா்வோர் புகார்களை நிவா்த்தி செய்ய 9444042322
என்ற
வாட்ஸ்ஆப்
எண்ணிலும்
புகார்
பதிவு
செய்யலாம். unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள்
நடவடிக்கை
எடுக்கப்பட்டு
வருகிறது.
இதை மேம்படுத்தும்
வகையில்
தற்போது https://www.foodsafety.tn.gov.in/ மற்றும் TN Food Safety Consumer என்ற பெயரில் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புகார்களை மிக எளிமையாக இச்செயலி வாயிலாக தெரிவிக்க முடியும். சமையல் எண்ணெய் பயன்பாடு, உணவு செறிவூட்டல் குறித்த விழிப்புணா்வு
ஏற்படுத்தும்
வகையில்
குறும்படங்கள்
தயாரிக்கப்பட்டு
சமூக
வலைத்தளம்
வாயிலாக
வெளியிடப்பட்டு
வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


