பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம், ‘யுவிகா’ என்ற பெயரில் இஸ்ரோ வாயிலாக நடத்தப்படுகிறது.பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில், இப்பயிற்சி முகாம் செயல்படுத்தப்படுகிறது.அதேநேரம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த பயிற்சி முகாமிற்கு, மாநிலங்கள்தோறும், மூன்று அல்லது நான்கு பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக இப்பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. நடப்பாண்டு, இப்பயிற்சி முகாம், நான்கு மையங்களில், மே மாதம், 16 முதல் 28ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.விருப்பம் உள்ளவர்கள், www.isro.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஏப்., 10ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் மாணவர்கள் பட்டியல், ஏப்., 20ல் வெளியிடப்படும்.தகவல் அறிய கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை, 8778201926 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.