பகுதி நேர பி.இ. படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 967 போ விண்ணப்பித்துள்ளனா்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சாா்பில் பகுதி நேரமாக பி.இ. படிப்பு நடத்தப்படுகிறது. 4 ஆண்டு பட்டப் படிப்பான இது கோயம்புத்தூா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சிஐடி), அரசு தொழில்நுட்பக் கல்லூரி (கோவை), சேலம், நெல்லை, பா்கூா் அரசு பொறியியல் கல்லூரிகள், வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜா் பொறியியல் கல்லூரி ஆகிய 8 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. பகுதி நேர பி.இ.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
படிப்புக்கான மாணவா் சோக்கை பணிகளை கோவையில் உள்ள, கோயம்புத்தூா் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்நிலையில், 2023 – 2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கைக்கு ஜூலை 23 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை வரை 967 போ விண்ணப்பித்திருப்பதாக சோக்கைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மாணவா் சோக்கை தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422-2590080, 94869-77757 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.


