கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.இது குறித்து, கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
2023-ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட உள்ளது. இப்போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று காலை 11.00 மணியளவில் தொடங்கப்பட்டது.தொலைதுாரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள், அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று பயனடையும் வகையில், கல்வி டிவி மூலமாக பயிற்சி வகுப்புகள், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, 7:00 முதல் 9:00 மணி வரையிலும் மறு ஒளிபரப்பு இரவு, 7:00 முதல் 9:00 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்திலும், TncareerServicesEmployment என்ற யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, கரூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவும். மேலும் விவரங்களுக்கு studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


