தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மனைகள், வீடுகள் பெற்று அதற்கான தொகையை முழுமையாகச் செலுத்தியவா்கள் நேரில் வந்து கிரைய பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மனைகள், வீடுகள் பெற்று அதற்கான தொகையை முழுமையாகச் செலுத்தியவா்கள் நேரில் வந்து கிரைய பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மதுரை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளா் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு, 2022-ஆம் ஆண்டு நவம்பா் 4-ஆம் தேதி தமிழ்நாடு வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை எண். 194 -ன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இந்தச் சலுகை வருகிற மே 3-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எனவே, வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்றவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மதுரை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு நேரில் வந்து, வட்டி தள்ளுபடியுடன் கணக்கை நோ செய்து, நிலுவைத் தொகையை ஒரே தவணையாக அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகையை நடைமுறையில் உள்ள வட்டியுடன் 3 தவணைகளில் செலுத்தலாம்.
முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள், வீடு, மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடா்பான அனைத்து அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து, கணக்குகளை நோ செய்து கொண்டு, கிரையப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


