தொழில் முனைவோர் இணைய வழி கருத்தரங்கம்
தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு குறித்த, இணைய வழி கருத்தரங்கம், நாளை நடக்க உள்ளது.
அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், வரும் 13ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இக்கர்தரங்கம் நடக்க உள்ளது.
இதில் சுயமாக தொழில் துவங்க விரும்பும் 18-30 வயதுடைய அனைவரும் பங்கேற்கலாம்.
முதல் கட்டமாக, சொந்தமாக தொழில் துவங்குவதில் உள்ள நன்மை, தொழில் வாய்ப்பு, தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழில் முனைவோருக்கு, அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவி, திட்டங்கள் ஆகியவை குறித்து விவரிக்கப்படும்.
இறுதியில், தொழில் துவங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு, அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு 044-22252081, 22252082, 8668102600, 9444557654 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


