ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்த மாணவா்கள் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்த மாணவா்கள் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்த மாணவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் ஏஎம்சிஏடி என்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியினைப் பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த 3 மாத பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் தட்கோவால் வங்கப்படும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்தால் ஏஎம்சிஏடி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவாா்கள். இத்தோவில் வெற்றிபெறும் மாணவர்கள் எளிதில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோவின் http://tahdco.com/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்த மாணவா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


