தானியங்கி முறையிலேயே கட்டிடம் அனுமதியை பெறும்
முறை, மே 1ம்
தேதி முதல் அமலுக்கு
வரும்
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும்
நகராட்சிகளில், பெருநகர
குழுமம் மற்றும் நகர்ப்புற
ஊரக இயக்ககம் மூலம்
கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி
தரபடுகிறது.
கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில்
அனுமதி பெற வேண்டியிருப்பதால், காலதாமதம் ஏற்படுவதோடு, அதிகளவில் அலைச்சல் இருப்பதாக
பொதுமக்கள் தரப்பில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதே
போல வீடு கட்டும்
போது மழை நீர்
சேமிப்புக்கான வசதி
இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை
நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி
கிடைக்கும். இந்த அனுமதி
எல்லாம் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகி
விடும். அனுமதி வந்த
பிறகே கட்டுமானப் பணிகளைத்
தொடங்க வேண்டும்.
இதனால்,
அனைத்து அனுமதிகளையும் ஒரே
நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில்
வழங்க, முதலமைச்சர் ஸ்டாலின்
அறிவுறுத்தினார்.
அதன்படி
ஒற்றைச்சாளர முறையில், அதுவும்
தானியங்கி முறையிலேயே கட்டட
அனுமதியை பெறும் முறை,
மே 1ஆம் தேதி
முதல் அமலாகிறது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது;
மே
1ம் தேதி முதல்
கட்டடங்களுக்கு அனுமதி
கோரி விண்ணப்பிப்போர் உரிய
ஆவணங்களை இணையதளம் மூலமாக
சமர்ப்பித்தால் போதும்,
நேரில் வர தேவையில்லை உரிய ஆவணங்கள் பதிவு
செய்திருந்தால் தானியங்கி
முறையிலேயே அனுமதி வழங்கப்படும்.