TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:2023, ஜூன்/ஜூலை பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள்(தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைசீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவை அறிய முடியும் என்பதால் சீட்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறு கூட்டல் வெளியீடு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


