பள்ளிகளில், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச கணித உபகரணப் பெட்டிகளை வழங்கலாம்’ என, பள்ளிக் கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9ம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவியருக்கு இலவச கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022 – 23ம் கல்வி ஆண்டில் வழங்கு வதற்கான கணித உபகரணப் பெட்டிகள், பாடநுால் கழகம் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த கணித உபகரணப் பெட்டிகள் அனைத்தும் தரமானதாக இருப்பது சோதனையிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, இனி மாணவர்களுக்கு வழங்கலாம்.
மாணவர்களுக்கு வழங்கும் போது அவற்றை புகைப்படம் எடுத்து, அதன் தொகுப்பை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.