TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரைகனடா முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் உஷாராக இருக்குமாறும், தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுரை
கனடா செல்லும் இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது அதில் தற்போது கனடாவில் வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
தூதரகம் வாயிலாக கனடா நாட்டிற்கு இந்தக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை எனவே
இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் கனடாவில் பயணம் செய்யும் போது மற்றும் படிக்கும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களை ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய உயர் ஆணையரகம் மற்றும் தூதரகங்கள் கனடாவில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதையும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அவர்களை அணுகுவதையும் இது எளிதாக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



