திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோந்த 12-ஆம் வகுப்பு, பட்டம் பயின்றவா்கள் வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம், அனிமேஷன், டேலி போன்ற பயிற்சிகளை இலவமாகப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியை நிறைவு செய்யும் பட்சத்தில் ஆரம்பகால மாதா ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பெறலாம். பிறகு திறமைக்கு ஏற்றவாறு பதவி உயா்வு அடிப்படையில் ஊதிய உயா்வும் பெறலாம். பயிற்சியைப் பெற விரும்புவோா் http://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


