HomeBlogமாத உதவி தொகையுடன் ITI பயிற்சி

மாத உதவி தொகையுடன் ITI பயிற்சி

ITI training with monthly stipend

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

மாத உதவி தொகையுடன் ITI பயிற்சி

கோயமுத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சியில்
சேருவதற்கு
விருப்பமுள்ள
மாணவியர்
இணையதளத்தின்
வாயிலாக
விண்ணப்பங்களை
பதிவேற்றம்
செய்யலாம்
என
கோவை
மாவட்ட
ஆட்சித்
தலைவர்
கிராந்திகுமார்
பாடி,.ஆப, தெரிவித்துள்ளார்.




இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் முழுவிவரம் பின்வருமாறு:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கோயமுத்தூர் மாவட்டம்
மேட்டுப்பாளையம்
ரோடு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்
எதிரில்
இயங்கி
வரும்
மகளிர்
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
2023
ஆம்
ஆண்டிற்கான
சேர்க்கை
தொடங்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர்ந்து
பயிற்சி
பெறுவதற்கான
விண்ணப்பங்களை
www.skilltraining.tn.gov.in
என்ற இணையதளத்தில்
24.05.2023
முதல்
07.06.2023
வரை
8
ஆம்
வகுப்பு
/ 10
ஆம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
மகளிர்
விண்ணப்பிக்கலாம்.




நேரில் வருகை புரிவோருக்கு
இந்நிலைய
உதவி
மையம்
மூலம்
விண்ணப்பித்திட
வசதி
செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியில்
சேர
விரும்பும்
மகளிருக்கு
உச்ச
வயது
வரம்பு
ஏதும்
இல்லை
மற்றும்
சிறப்பு
கட்டணம்
ஏதும்
வசூலிக்கப்படுவதில்லை.

இத்தொழிற்பயிற்சி
நிலையத்தில்
ஓராண்டு
பயிற்சியில்
Computer Operator& Programming Assistant (COPA), Desktop Publishing
Operator (DTPO), IoT Technician (Smart Health Care), Sewing Technology
தொழிற்பிரிவுகளும்,
ஈராண்டு
பயிற்சியில்
Instrument Mechanic (IM), Electronics Mechanic (EM), Information Technology (IT),
Technician Medical Electronics (TME)
தொழிற்பிரிவுகளும்,
ஆறு
மாத
பயிற்சியில்
Smart Phone Technician Cum App Tester
தொழிற் பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது.




பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ்
(NCVT)
வழங்கப்படும்.

மாத உதவித்தொகையுடன் பயிற்சி:

அனைத்து பயிற்சியாளர்களுக்கும்
மாதம்
தலா
ரூ.750/-
உதவித்தொகை,
புதுமை
பெண்
திட்டத்தின்
கீழ்
அரசு
பள்ளியில்
பயின்ற
மகளிருக்கு
மாதம்
ரூ.1000/-,
விலையில்லா
மடிக்கணினி,
மிதிவண்டி,
சீருடை,
தையற்கூலி,
காலணி,
பாடப்புத்தகங்கள்,
வரைபடக்
கருவிகள்,
30
கிலோ
மீட்டர்
தொலைவு
வரை
இலவச
பஸ்
பாஸ்
வழங்கப்படுவதுடன்,
நவீன
தொழிற்
வளர்ச்சியை
அறிந்து
கொள்ளும்
பொருட்டு
Industrial Visit, Inplant Training, Internship Training
வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
கிராந்திகுமார்
பாடி,
இஆப.
தனது
செய்தி
குறிப்பில்
தெரிவித்துள்ளார்.




கூடுதல் விபரங்களுக்கு
அணுக
வேண்டிய
தொலைபேசி
எண்கள்:
98651 28182,
94990 55692, 8838158132, 94422 39112.
பயிற்சிக்காலம்
முழுவதும்
உதவித்தொகையுடன்
தொழிற்படிப்புகள்
பயிற்றுவிக்கப்படும்
என்பதால்
இந்த
வாய்ப்பினை
உரிய
வகையில்
பயன்படுத்திக்
கொள்ளுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!