பெண்களின் நலனிற்காக ஆரம்பிக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் மத்திய அரசு புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று தாக்கல் செய்தது. அப்போது பெண்களுக்கான 7.5% வட்டி விகிதம் அளிக்கும் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே சேர்ந்து கொள்ள முடியும். 2 வருட முதிர்வு காலம் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் நல்ல லாபத்தை அடையாளம்.
முன்னதாக, பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே இந்த கணக்கை தொடங்க முடியும். ஆனால் இனி, அதைத்தவிர எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகளிலும் பெண்கள் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதனை மூலம் பெரும் வருமானம் ஆண்டுக்கு ரூ.40,000 ஐ தாண்டும் போது மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.