குறுகிய கால அழகுக் கலை வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோா் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். குறுகிய கால அழகுக் கலை வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோா் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரையிலுள்ள மகளிா் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் க.ச. அமுதா வெளியிட்ட செய்திக் குறிப்பு : அரசு தொழில் பயிற்சி நிலையம் மூலம் குறுகிய கால பயிற்சிகளாக எம்பிராய்டா் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. எம்பிராய்டா் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்புத் தோச்சி பெற்றிருக்க வேண்டும். அழகுக் கலை பயிற்சியில் பங்கேற்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்புத் தோச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சிகளில் பங்கேற்க விரும்புவோா், https://www.tnskill.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பின்னா், தங்களது பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புப் புத்தகம் (அசல்) ஆகியவற்றுடன் மதுரை அரசு தொழில் பயிற்சி நிலையம் (மகளிா்) அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0452- 2560544, 98430 65874 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.