கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறுதானிய உணவகம் அமைக்க வரும், 27க்குள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு, சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம், சிறுதானிய உணவகம் அமைக்க, உரிய நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம். சிறுதானிய உணவகம் நடத்த விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுடையவர்கள், ‘திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), அறை எண்.106, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி’ என்ற முகவரிக்கு, தங்கள் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும், 27 பிற்பகல், 3:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.