Home Blog காவலர் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு – கரோனா ‘நெகட்டிவ்’சான்று அவசியம் : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

காவலர் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு – கரோனா ‘நெகட்டிவ்’சான்று அவசியம் : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

0

காவலர் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு - கரோனா ‘நெகட்டிவ்’சான்று அவசியம் : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


காவலர் பொது தேர்வுக்கு வருபவர்கள், தங்களுக்கு கரோனா தொற்றுஇல்லை என்ற சான்றுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 19 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்.17-ம் தேதிவெளியானது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த டிச.13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை கடந்த ஏப்.21-ம் தேதிமுதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறுகாரணங்களால் தேர்வு தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் வரும் 26-ம் தேதிமுதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், இந்த தேர்வில் கலந்துகொள்ள வருவோர் அழைப்புக் கடிதத்துடன் ஆஜராக வேண்டும். செல்போன் மற்றும் இதர மின்னணு சாதனங்களை தேர்வு நடைபெறும் இடத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

மேலும், கரோனா தொற்று இல்லை என நெகட்டிவ் சான்றுடன் வருவோர் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆஜராக வேண்டும் என்றுதேர்வாணைய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version