ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்சிடிஇ) 50-வது பொதுக்குழு கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி சான்றிதழின் செல்லத்தக்க காலத்தை (7 ஆண்டுகள்) வாழ்நாள் முழுவதும்நீட்டித்து முடிவெடுக்கப்பட்டு, அதற்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு என்சிடிஇ உறுப்பினர்-செயலர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
‘டெட்’ சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க சான்றிதழாக மாற்றும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஆணையில் உரிய திருத்தம் செய்யுமாறுஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அரசுக்கு கருத்துருஅனுப்பியிருந்தார். அக்கருத்துருவை அரசு ஆராய்ந்து, ‘டெட்’ சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க சான்றிதழாக்கி ஆணையிடுகிறது. இந்த ஆணை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்ட ‘டெட்’ சான்றிதழுக்கும் பொருந்தும்.
இதற்கிடையே, ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே,பணிநாடுநர்களுக்கு ஏற்கெனவேவழங்கப்பட்ட சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது. இதற்காக தனியாக சான்றிதழ் பெறத் தேவையில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


