தேர்தல் ஆணைய
போட்டி – கால அவகாசம்
நீட்டிப்பு
தேசிய
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்பதற்கான கால
அவகாசம் மார்ச் 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனது
ஓட்டு எனது எதிர்காலம்– ஒரு ஓட்டின் வலிமை
என்ற கருத்தை மையமாக
கொண்டு https://voterawarenesscontest.in/ என்ற
இணையதளம் மூலம், தேசிய
வாக்காளர் விழிப்புணர்வு போட்டி
நடத்தப்படுகிறது.
வினாடி
– வினா, வாசகம் எழுதும்
போட்டி, பாட்டுப்போட்டி, காணொலி
காட்சி உருவாக்கும் போட்டி,
போஸ்டர் வடிவமைக்கும் போட்டி
என ஐந்து பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
இதற்கான
கால அவகாசத்தை, மார்ச்
31 வரை தேர்தல் ஆணையம்
நீட்டித்துள்ளது.
பள்ளி,
கல்லுாரி மாணவ, மாணவியர்,
அரசு, தனியார் நிறுவன
ஊழியர்கள், தொழில் முனைவோர்
அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம் என்று Covai கலெக்டர் சமீரன்
தெரிவித்துள்ளார்.