HomeBlogமாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் - நாமக்கல்

மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் – நாமக்கல்

மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்
நாமக்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:

படித்து
முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித
வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக
காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில்,
மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி
பெறாதவர்களுக்கு ரூ.200,
10
ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300,
மேல்நிலை கல்வியில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.400
மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600
வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை
மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி
மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750
மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000
வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்
தொகை வழங்கப்படுகிறது.

இந்த
திட்டத்தின் கீழ் தற்போது
செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டிற்கு மேற்கண்ட
கல்வி தகுதிகளை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
பதிவு செய்து 5 ஆண்டு
காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும், இம்மையத்தில் பதிவு
செய்து ஒரு வருடம்
முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானர்வர்கள் ஆவார்.
ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடியினர் 45 வயதுக்கு
மிகாமலும், ஏனையோரை பொறுத்த
மட்டில் 40 வயதுக்கு மிகாமலும்
இருத்தல் வேண்டும். மனுதாரர்
குடும்ப ஆண்டு வருமானம்
ரூ.72,000-க்கு மிகாமலும்,
இருத்தல் வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு
இல்லை.

மனுதாரர்
அரசு அல்லது தனியார்
நிறுவனங்களின் வாயிலாக
எந்தவிதமான நிதி உதவித்தொகையும், பெறுபவராக இருத்தல் கூடாது.
மனுதாரர் அன்றாடம் கல்வி
நிறுவனங்களுக்கு செல்லும்
மாணவ, மாணவியராக இருத்தல்
கூடாது. இந்த நிபந்தனை
தொலைதூரக் கல்வி அல்லது
அஞ்சல் வழி கல்வி
கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும், மனுதாரர் உதவித்
தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.மேற்கண்ட
தகுதியுடையவர்கள் உடனடியகா
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல்
சான்றிதழ்கள் மற்றும்
அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

சுய
உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவி தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து
10
ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும், இதுவரை சுய
உறுதிமொழி ஆவணம் கொடுக்காத
நபர்கள், உடனடியாக மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
உரிய படிவத்தில் சுய
ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular