காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோடா, கோத்தா, குரும்பாஸ், இருளர், பனியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய பழங்குடியின மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு, 50 நபர்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கே.எஸ்.எம்., டிரஸ்ட் நிறுவனம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
விருப்பமுள்ள பழங்குடியின பிரிவினர், 73388 01317, 70107 39120 ஆகிய எண்களில் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சியில் பங்கேற்போருக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும்.ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


