பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது.
இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். பிளஸ் 1,பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


