பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்போட்டித் தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 19 ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இப் பயிற்சி வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளருக்கான இலவச மாதிரி தேர்வுகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94990 55913 என்னும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.