HomeBlogதமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

Overseas employment for Tamil Nadu youth

தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

தமிழக இளைஞர்களுக்கு இங்கிலாந்து, கத்தார், அயர்லாந்து, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில்:

தமிழக அரசின் தொழிலாளார் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் தமிழக இளைஞர்களுக்கு இங்கிலாந்து, அயர்லாந்து, கத்தார், ஓமன் ஆகிய வெளிநாடுகளிலும், அண்டை மாநிலமான ஆந்திரா விலும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

தொழிலாளர் நலத் துறை மற் றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தமிழக இளைஞர் களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட் டுள்ளன. அதன்படி, கே.எம்.எஸ். கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கான சம்பளம் (இந்திய மதிப்பில்) மாதம் ரூ.72,000 வரை வழங்கப்படும்.

அதேபோல, செவிலியர் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ள வர்களுக்கு அயர்லாந்து ரெக்வயர் மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கான மாதச் சம்பளம் ரூ.2.50 லட்சம் ஆகும்.

மேலும், இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கான மாதச் சம்பளம் ரூ.2.50 லட்சமாகும்.

கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள கத்தார் மருத்துவமனையில் செவிலிய ராக பணியாற்ற, பிஎஸ்சி முடித்த பெண்கள் 15 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கான மாதச் சம்பளம் ரூ.70,000 ஆகும்.

ஓமன் நாட்டில் பணி யாற்ற டீனஸ் ஓமன் எல்எல்சி நிறுவ னத்தில் டர்னர், பிட்டர், மெக்கா னிஸ்ட் மற்றும் மெக்கானிக் பணி களுக்கு 20 பேர் தேவைப்படுகின் றனர். இவர்களுக்கான மாதச் சம்பளம் ரூ.29,000 வழங்கப்படும் என அந்நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் அருகாமையில் உள்ள ஆந்திர மாநிலம், நாயுடுப் பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் (டிவிஎஸ் குழுமம்) ஆப்ரேட்டர்கள் 200 பேர் தேவைப்படுகின்றனர்.

மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்  

இவர்களுக்கான மாத சம்பளம் ரூ.12,000 வரை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆந்திராவில் உள்ள இதர நிறுவனங்களில் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றனர். உணவு, தங்குமிடம் இலவசம். வாரம் ஆறு நாட்களுக்கு வேலை. 8 மணி நேர ஷிப்ட் முறையில் வேலை வழங்கப்படும்.

சென்னை இருங்காட்டு கோட்டை தொழிற்பூங்காவில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 40 ஆண் மற்றும் பெண்களுக்கு சிஎன்சி மில்லிங், வெல்டிங் டிரெய்னிங் மற்றும் சாஃப்ட் ஸ்கில்ஸ் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப் படும்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் 91764 34488 மற்றும் 86674 07470 ஆகிய தொலைபேசி எண்கள், ovemcl@gamil.com என்ற இ-மெயில் முகவரியிலும், www.omcmanpower.com என்ற இணைய தளம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

        🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

        💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular

        🔥 TNPSC 5000+ Notes PDF Group!