மத்திய குடியுரிமைப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனப் பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இந்தியா முழுவதும் இருந்து 225 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் 56 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள்.
முதன்மைத் தேர்வில் வென்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஜூலை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நேர்முகத் தேர்வுக்கான இலவச பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சலிலோ, 6379784702, 9003073321ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.