Home Blog முதல் முறையாக கணினி வழித் தேர்வு: நாளை TNPSC நடத்துகிறது (தேர்வுக்கான முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம்...

முதல் முறையாக கணினி வழித் தேர்வு: நாளை TNPSC நடத்துகிறது (தேர்வுக்கான முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது)

0

முதல் முறையாக கணினி வழித் தேர்வு: நாளை TNPSC நடத்துகிறது (தேர்வுக்கான முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது)

முதல் முறையாக கணினி வழித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடத்தவுள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணிக்கும், பிற்பகலில் 1.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த நேரத்துக்குப் பிறகு வரும் தேர்வர்கள் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

கணினி வழித் தேர்வுக்கான முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும், தேர்வின் தொடக்கத்தில் 180 நிமிஷங்கள் காண்பிக்கப்படும். இது படிப்படியாக் குறைந்து பூஜ்ஜியத்தை அடையும் போது தேர்வு தானாக முடிவடையும். தேர்வானது கணினி அமைப்பால் தானாகவே சமர்ப்பிக்கப்படும்.

வினாக்கள் ஏறுமுக வரிசைப்படி ஒவ்வொன்றாக கணினித் திரையில் தோன்றும். அதற்கு ஒன்றின் பின் ஒன்றாக விடையளிக்க வேண்டும். ஒரு வினாவுக்கான விடையைத் தேர்வு செய்ய அதற்கென அளிக்கப்பட்டுள்ள விடை தெரிவுகளில் ஒன்றின் மீது கிளிக் செய்தவுடன், அதனை சேமிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் விடைகள் சேமிக்கப்படாது என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Click Here to Download PDF

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version