எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேரும் என மொத்தம் 36,100 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா்.
விண்ணப்பங்கள் பரிசீலனை நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, 7.5% உள் இடஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 454 எம்.பி.பி.எஸ்., 104 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.
அக்டோபர் 19, 20 ஆகிய நாள்களில் சிறப்பு பிரிவினருக்கான நேர்காணல் நடைபெறுகிறது. அக்டோபர் 20ஆம் தேதி காலை 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான 558 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். 30ஆம் தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


