Tuesday, October 14, 2025
HomeBlogஇந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலவச தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலவச தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலமாக சணல் பை மற்றும் இதர பொருட்கள் தயாரித்தல் 13 நாள் பயிற்சி வரும் டிச., 16ம் தேதி காலை 9:30 மணியளவில் துவங்கவுள்ளது.

இப்பயிற்சிக்கு கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். இதற்கு வயதாக ஆண், பெண் இருவருக்கும் 18 வயது முதல் 24 வயதும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு அலமேலுபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை நேரிலோ அல்லது 04146 227115 அல்லது 7598466681 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம். 

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular